188
பொலிவுட், ஹொலிவுட் திரையுலக நடிகை பிரியங்கா சோப்ரா தன் வாழ்க்கை வரலாற்றை ஒரு புத்தகமாக வௌியிடப்போவதாக அறிவித்துள்ளார். தனது 17ஆவது வயதில் மிஸ் இந்தியா பட்டத்தைப் வென்ற பிரியங்கா, அதே ஆண்டில் உலக அழகி பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். இதனையடுத்து இந்தி சினிமாவில் தனது திரையுலக நடிப்பு வாழ்வை தொடங்கினார்.
36 வயதான இவர் கடந்த 17 ஆண்டுகளாக நடிப்பில் தனது பெயரை பொறித்து வருகிறார். தமிழன் திரைப்படத்தில் நடிகர் விஜயிற்கு நாயகியாகவும் நடித்துள்ளார். ‘குவாண்டிகா’ என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் பிரபலமான பிரியங்கா, சிறந்த கதாபாத்திரத்திற்கான விருதை இரண்டு முறைகள் பெற்றுள்ளார். இத்தகைய விடயங்கள் அடங்கிய இப் புத்தகம் இந்தப் புத்தகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.
நடிகை, தயாரிப்பாளர், சமூக சேவகி, யுனிசெப்பின் நல்லெண்ணத் தூதர் போன்ற பன்முகங்கள் கொண்ட பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கை வரலாறு ‘Unfinished’ என்ற என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவருகின்றது. இதில் இவரைப் பற்றிய கட்டுரைகள், வாழக்கை வரலாறு குறித்த விடயங்களுடன் இவரைப் பற்றிய மதிப்பீடுகளும் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

Spread the love