Home பிரதான செய்திகள் உலககிண்ண கால்பந்து போட்டி – சுவீடன் , பிரேசில், சுவிட்சர்லாந்து நொக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம் – ஜேர்மனி தொடரிலிருந்து வெளியேற்றம்

உலககிண்ண கால்பந்து போட்டி – சுவீடன் , பிரேசில், சுவிட்சர்லாந்து நொக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம் – ஜேர்மனி தொடரிலிருந்து வெளியேற்றம்

by admin

ரஸ்யாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்று இடம்பெற்றுள்ள நான்கு லீக் போட்டிகளில் ஒரு லீக் போட்டியில் நடப்பு சம்பியனான ஜெர்மனி அணி, கொரியா குடியரசை எதிர்கொண்ட நிலையில் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து தொடரைவிட்டு வெளியேறியுள்ளது.

இதனையடுத்து மெக்சிகோ மற்றும் சுவீடன் அணிகளுக்கிடையிலான போட்டியில் சுவீடன் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அணி நொக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.  மற்றொரு போட்டியில் சேர்பிய அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அணி நொக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

அதேவேளை சுவிட்சர்லாந்து மற்றும் கொஸ்ராரிக்ரிகா அணிகள் போட்டியிட்ட நிலையில் கொஸ்ராரிக்ரிகா ஏற்கனவே தொடரைவிட்டு  வெளியேறிவிட்ட நிலையில், இன்றைய போட்டி 2-2 என சமனிலையில் முடிவடைந்தது. இதனையடுத்து இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்ட நிலையில் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்த சுவிட்சர்லாந்து அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More