உள்நாட்டுப் போர் காரணமாக அங்கிருந்து வெளியேறி பங்களாதேசில் குடியேறி உள்ள ரோஹிங்கியா அகதிகளை பதிவு செய்யும் பணியை ஐ.நா. மற்றும் பங்களாதேஸ் அரசு ஆகியன ஆரம்பித்துள்ளன. பங்களாதேசில் தஞ்சம் அடைந்துள்ள 7 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா இன மக்கள் அங்குள்ள அகதிகள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், றோஹிங்கியா அகதிகளை பதிவு செய்யும் பணியை ஐ.நா. வின் அகதிகள் உயர்மட்டக் குழுவுடன் இணைந்து பங்களாதேஸ் அரசு இந்த வாரம் தொடங்கியுள்ளது இந்த நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் மாதத்துக்குள் பதிவு செய்து முடிக்கப்படும் எனவும் இந்த தகவல்களில், அகதிகளின் குடும்பம், பிறப்பு குறித்த தகவல்கள் அடங்கியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்காக அகதிகளின் கைரேகை, கண் விழிகள் உட்பட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதுடன் தகவல்கள் கொடுத்த அகதிகளுக்கு ஐ.நா. மற்றும் பங்களாதேஸ் அரசின் லோகோ அடங்கிய அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது ரோஹிங்கியா இன மக்கள நாடு திரும்புவதற்கு உதவியாக இருக்கும் எனவும் அவர்களைப் பல பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க உதவியாக இருக்கும் தெரிவிப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.