அமெரிக்கா மற்றும் ரஸ்யாவுக்கிடையலான சந்திப்பினை மூன்றாவது நாடு ஒன்றில் நடத்த இருநாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் புட்டினின் உதவியாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்க தேசிய ஆலோசகர் ஜோன் போல்டோன் நேற்றையதினம் ரஸ்ய தலைநகர் மொஸ்கோவிற்கு சென்று அங்கு நடைபெற்ற நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
அவரை வரவேற்று உரையாற்றிய ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உங்களது மொஸ்கோ பயணம் இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவு முழுமையடைவதற்கான முதல் படிக்கட்டாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதைதொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கும் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தையை அமெரிக்கா மற்றும் ரஸ்யா அல்லாத மூன்றாவது நாட்டில் நடத்த இருநாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் புட்டினின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைக்கான திகதி மற்றும் நேரம் ஆகியன தீர்மானிக்கப்பட்டு விட்டதாகவும் இதுதொடர்பாக அமெரிக்காவுடன் இணைந்து நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புட்டினுக்கும் டிரம்ப்புக்கும் இடையிலான சந்திப்பும், முக்கிய பேச்சுவார்த்தையும் ஒஸ்ரியாவின் தலைநகர் வியன்னாவில் நடைபெறும் என ரஸ்ய ஜனாதிபதியின் செய்தி தொடர்பாளர் டிமிர்ட்டி பெஸ்கோவ் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.