Home பிரதான செய்திகள் அயர்லாந்துடனான முதலாவது T20 போட்டியில் இந்திய அணி வெற்றி

அயர்லாந்துடனான முதலாவது T20 போட்டியில் இந்திய அணி வெற்றி

by admin


அயர்லாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டுடன் இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு தொடரில் விளையாடி வருகிறது.  இந்தவகையில் இன்று நடைபெற்ற முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இந்திய அணி 76 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. நாணயச்சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி களத்ததடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதனையடுத்து 209 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 132 ஓட்டங்களை மர்திரமே எடுத்தமையினால் இந்திய அணி 76 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த இருபதுக்கு இருபது போட்டி எதிர்வரும் 29-ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More