சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப் பணம் அல்ல என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். இந்திய அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில், சட்டத்திற்கு புறம்பாக அதிகளவில் பணம் பதுக்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் தொடர்கின்றன.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் கருப்புப்பண விவகாரம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்த நிலையில், மோடி பல வாக்குறுதிகளுடன் ஆட்சியை கைப்பற்றி இருந்தார். பிரதமரானதும் கறுப்புப்பணத்தை மீட்கும் நடவடிக்கையாக தனி குழு அமைத்த போதும் இந்த விடயம் கிடப்பில் பொடப்பட்டதக விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் உள்ள நஷனல் வங்கி இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் வைப்புச் செய்துள்ள பணம் குறித்தான தகவல்களை வெளியிட்டது. இதில் கடந்த 2016-ம் ஆண்டை விட இந்தியர்களின் பணம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் இது கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும் எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பணம் அனைத்தும் கறுப்புப்பணம் அல்ல என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.