இந்தியா பிரதான செய்திகள்

கடவுச்சீட்டு சேவா கையடக்க செயலி – 2 நாட்களில் 10 லட்சம் பேர் பதிவிறக்கம்


கடவுச்சீட்டு விண்ணப்பிக்க இந்திய மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட கடவுச்சீட்டு சேவா கையடக்க செயலியை, 2 நாட்களில் 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக கடவுச்சீட்டு விண்ணப்பிக்க, புதுப்பிக்க மற்றும் தொலைந்து போன கடவுச்சீட்டுகளுக்கு, மாற்று கடவுச்சீட்டு பெறுவதற்காக மத்திய வெளியுறவு அமைச்சகம் ‘கடவுச்சீட்டு’ புதிய செயலி ஒன்றை நேற்று முன்தினம் வெளியிட்டது.
கடவுச்சீட்டுக்கான கட்டணம் செலுத்துதல், நேர்முக திகதியை தேர்வு செய்வது ஆகியவற்றையும் இந்த செயலி மூலமாக எளிதாக செய்ய முடியும்.

இந்நிலையில், 2 நாட்களில் ‘கடவுச்சீட்டு சேவா’ செயலியை 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். செயலி மெதுவாக இயங்குவதாக பலர் பின்னூட்டம் செய்திருப்பதனால், கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link