சீனாவின் குனான் மாகாணத்தில் நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்றுடன் பாரவூர்தி மோதி ஏற்பட்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர். இரு வாகனங்களும் பெரும் சேதத்துக்குள்ளாகியுள்ளதாகவும் காயமடைந்துதவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு வாகனங்களும் வேகமாக வந்ததன் காரணமாகத்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சீனாவில் கடந்த சில மாதங்களில் நடந்த மோசமான விபத்ததாக இது கருதப்படுகிறது.சீனாவில் ஒவ்வொரு வருடமும் வீதி விபத்துகளில் மட்டும் 260, 000 பேர் உயிரிழந்கிகனற்னர் எனவும் இவற்றில் பெரும்பாலும் பேருந்து, புகையிரத விபத்து எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது