குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….
இந்தியாவை பாரதூரமான நெருக்கடிக்குள் உள்ளாக்கி காஷ்மீரில் தனிநாடு அமைக்கும் நோக்கில் புலம்பெயர் ஈழத்தமிழர்களும் காஷ்மீர் பிரிவினைவாதிகளும் ஒன்றாக இணைந்துள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
புலம்பெயர் ஈழத்தமிழர் அமைப்புகள், முதல் முறையாக ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் காஷ்மீர் அரசசார்பற்ற அமைப்புகளுடன் இணைந்து இந்தியாவுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளன.
இதற்கு முன்னர் இப்படியான சம்பவம் நடைபெற்றதில்லை. இலங்கைக்குள் ஈழத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவை பிளவுப்படுத்தி காஷ்மீர் நாட்டை உருவாக்க வேண்டும் என புலம்பெயர் ஈழத்தமிழர் அமைப்புகள் கூறியுள்ளன.
அதேவேளை இந்தியாவின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சம்பவத்திற்கு எதிராகவும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மனித உரிமை ஆணைக்குழுவில் நான்கு கூட்டங்களை நடத்தியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.