குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான முதல் கட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் பாதுகாப்பு பிரிவு பொறுப்பதிகாரி கப்டன் அசோக் ராவ், இது குறித்து விடயங்களை ஆராய்வதற்காக தலைமன்னாருக்கு விஜயம் செய்துள்ளார். தலைமன்னார் சென்ற அசோக் ராவ், இலங்கை கடற்படையின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னார் வரை பயணிகள் கப்பல் சேவையை நடத்த இந்திய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய பிரதமர் நரோந்திர மோடி இலங்கை வந்திருந்த போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடி இருந்தார்.