172
அந்தமான் தீவுப்பகுதியில் இன்று இரண்டு தடவைகள் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக அந்தமானின் தென்கிழக்கு பகுதியில் அதிகாலை 5.30 மணியளவில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியநிலையில், நண்பகல் 12.42 மணியளவில் 5.2 ரிக்டர் அளவில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love