இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் அன்னை தெரசா தொண்டு நிறுவன குழந்தைகளை விற்பனை செய்தமை தொடர்பில் 2 கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அன்னை தெரேசாவினால் ஆரம்பிக்கப்பட்ட மிஷனரீஸ் ஒப் சரிட்டி என்னும் அறக்கட்டளையின் கீழ் ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது.
இந்த காப்பகம் திருமணம் ஆகாமல் சிறுவயதிலேயே தாயான சிறுமிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஆதரவு வழங்கி வருகின்றது.இந்த நிலையில் இந்த அறக்கட்டளையின் தலைவியான கன்னியாஸ்திரி கொன்சிலியாவும் அவருடைய உதவியாளரான மற்றொரு கன்னியாஸ்திரி ஆகிய இருவரும் சேர்ந்து, குழந்தைகள் காப்பகத்தில் பிறந்த 3 பச்சிளம் குழந்தைகளை தலா 50 ஆயிரம் வீதம் 3 தம்பதிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, கொன்சிலியா மற்றும் அவருடைய உதவியாளர் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர் மேலதிக் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.