“இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தொழிலுக்குப் பயன்படுத்திய படகும் தடுத்துவைக்கப்பட்டுள்ளது” என இலங்கைக் கடற்படையினர் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று (8) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நெடுந்தீவுக் கடற்பரப்பில் இடம்பெற்றது. கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 4 பேரும் யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்படுவர் என்றும் இலங்கைக் கடற்படையினர் கூறினர்.
இதே குற்றச்சாட்டில் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.