156
கொழும்பு ஜம்பெட்டா வீதியில் இலங்கை நேரம் இன்று இரவு 8 மணிக்கும் 9 மணிக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிபிரயோகத்தில் பெண்ணொருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் இவர்கள் பலியாகியுள்ளனர். இதேவேளை துப்பாக்கிபிரயோகத்தில் காயமடைந்த மேலும் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ள காவற்துறையினர் சோதனைநடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
Spread the love