170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பாணந்துறை அருக்கொட பிரதேசத்தில் உள்ள வீட்டில் பிரபல சி்ங்கள பாடகி பிரியானி ஜயசிங்க, தனது கணவனின் கத்தி குத்துக்கு இலக்காகி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு 8.50 அளவில் நடந்துள்ளது.
குடும்ப சண்டை இந்த கொலைக்கு காரணம் என்பது காவற்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 53 வயதான பிரியானி ஜயசிங்க பல புகழ்பெற்ற பாடல்களை பாடியுள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தாயான இவர், பாணந்துறையில் தனது மகளுடன் வசித்து வந்தார். சம்பவம் குறித்து பாணந்துறை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love