Home இலங்கை சுட்டுக்கொல்லப்பட்ட கிருஷ்ணா கஞ்சா போதைப்பொருள் வழக்கில் பிணையில் விடுதலையானவர்?

சுட்டுக்கொல்லப்பட்ட கிருஷ்ணா கஞ்சா போதைப்பொருள் வழக்கில் பிணையில் விடுதலையானவர்?

by admin

 

கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான கிருஷ்ண பிள்ளை கிருபானந்தனின் மரணம் போதைப்பொருள் வியாபரத்துடன் தொடர்புடையதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர்,  24 மணிநேரத்துக்குள் இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் புறக்கோட்டை காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட செட்டியார்தெருவில் பழக்கடையொன்றுக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினரான 40 வயதுடைய கிருஷ்ண என்பவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இவர் மீது கஞ்சா போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் இரண்டு வழக்குகள் காணப்படுகின்றன. இதில் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்ட இவர் தற்போது பிணையிலிருந்த நேரத்திலேயே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.

இவரது மரணமானது போதைப்பொருள் வியாபாரத்தை மையப்படுத்தியே மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுகின்றது.

எவ்வாரெனினும் மேல்மாகாண சிரேஷ்ட காவற்துறை மா அதிபரின் வழிக்காட்டலின் கீழ் குற்றத்தடுப்பு பிரிவு காவற்துறை பிரிவாலும், புறக்கோட்டை காவற்துறை  நிலைய பொறுப்பதிகாரியின் கீழான குழுவொன்றும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

1 comment

K.Ranjithkumar July 9, 2018 - 7:33 pm

How ever though if this man involved in drug trafficking as well under parole. Though how Sri Lankan constitution allow him to contesting the Sri Lankan election and became himself as a municipal councillor. In fact if we dig out all those major politicians including those ministers. That Vimal WEEEEEEERa wansa low cast bugger as well has to be behind the bars. As well our Mahind and co company Gotha mama those CIA and KGP agents those who ever involve in those drug mafia group may be. Where as how those guys got all those huge funds for their political campaign those billion and billion dollar of money for all those luxurines. All it’s in this hawala drug black cum dirty money over all those tax evasion which as well belongs to the public funds. If those funds put together get out from these drug mafia guys who ever ruling us bit most of them are not even passed out their 8th standard folks slum dogs. Our country will be prosperous like Singapore as well challenging towards to those western world. Give those chances to the educated high schoolers to ruling our country in equitable basis representing all community members sinhala,tamil, muslim,christian,hindu, buddhist guys part taking it amicable way towards. This is my humble view. May God bless our mother Sri Lanka.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More