இந்திய பொருளாதாரம் விரைவாக வளர்ச்சி அடைவதாக கூறப்பட்டாலும், 2014-ம் ஆண்டிலிருந்து அது தவறான திசையில் சென்று கொண்டிருப்பதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போNது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கு முன் தெற்காசிய மண்டலத்தில் பொருளாதாரத்தில் இலங்கைக்கு அடுத்து இரண்டாவது சிறந்த நாடாக விளங்கிய இந்தியா, இப்போது மோசமான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானுக்கு அடுத்து இரண்டாவதாக உள்ளது. மக்களிடையே நிலவும் பொருளாதார சமத்துவமின்மையைக் கண்டுகொள்ளாமல் அரசு விலகியிருக்கிறது. சமூகத்தின் ஒரு பிரிவினர் அடுத்த வேளை உணவுக்கான உறுதி இல்லாமலும், நலவாழ்வு, கல்வி ஆகியவை இல்லாமலும் வாழ்கிறார்கள் என பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் சுட்டிக்காட்டியுள்ளார்