வடக்கிற்கு பயணித்து மக்களின் பிரச்சினைகளை கண்டறியுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விடுத்த அழைப்பை தான் ஏற்பதாக சமூக நலன்புரி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் விடுத்த அழைப்பிற்கு பதிலளிக்கும் முகமாக அவர் நேற்று ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “வடக்கு மக்களின் பிரச்சினைகளை கண்டறிய வடக்கிற்கு பயணம் செய்யுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்கள் மூலம் அறிவித்திருந்தார். ஆகவே வடக்கு முதல்வரின் குறித்த அழைப்பை நான் ஏற்கின்றேன்.
அதன் அடிப்படையில் சி.வி விக்கினேஸ்வரனுடன் இணைந்து வடக்கில் கண்காணிப்பு பயணம் ஒன்றை மேற்கொள்ள நான் தயாராக உள்ளேன். அதற்கு திகதி நிர்ணயம் உட்பட அனைத்து ஏற்பாடுகளையும் வசதிகளையும் முதல்வர் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.