Home இலங்கைவவுனியா குருமன்காட்டில், ஒரே இரவில், 3 வியாபார நிலையங்களில் திருட்டு…

வவுனியா குருமன்காட்டில், ஒரே இரவில், 3 வியாபார நிலையங்களில் திருட்டு…

by admin


வவுனியா குருமன்காட்டுச் சந்தியிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் பணம் திருட்டுப் போயுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்புப்பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று இரவு குருமன்காட்டுச்சந்தியிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்கள், பலசரக்கு வியாபார நிலையம், அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையம், தொலைத்தொடர்பு பரிவர்த்தனை நிலையம் என, மூன்று வர்த்தக நிலையங்களுக்குள் கூரையைப்பிரித்து உள்நுழைந்த திருடர்கள் வர்த்தக நிலையத்திலிருந்த பணத்தினை எடுத்துச் சென்றுவிட்டதாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற காவற்துறையினர் விசாரணைகளுக்காக குறித்த மூன்று வர்த்தக நிலைய உரிமையாளர்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More