ஜப்பானில் கடந்த 26 ஆண்டுகளுக்கு பின்னர் பெய்யும் கனமழை காரணமாக அந்நாட்டின் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் இதுவரை 86 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர். இந்தக் கனமழை காரணமாக இதுவரை 249 பேர் உயிரிழந்துள்ளதுடன் அதிகமானோரைக் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஒகாயமா, ஹிரோஷிமா, யாமாகுச்சி பகுதிகள் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெரும்பாலான இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதுடன் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமாகி வருவதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக மீட்பு படையினரும் ராணுவத்தினருமாக 70 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.