Home இலங்கை மன்னாரில் பத்து இடங்களில் இடம் பெற்ற எச்.ஐ.வி நோய்க்கான பரிசோதனைகள்- (படங்கள்)

மன்னாரில் பத்து இடங்களில் இடம் பெற்ற எச்.ஐ.வி நோய்க்கான பரிசோதனைகள்- (படங்கள்)

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


மன்னார் மாவட்டத்தில் முதன் முறையாக 10 இடங்களில் இன்று வியாழக்கிழமை (12) காலை எச்.ஐ.வி தொற்று நோய்க்கான பரிசோதனைகள் இடம் பெற்றுள்ளது. இன்று காலை 9.30 மணி முதல் நண்பகல் 1 மணிவரை தெரிவு செய்யப்பட்ட நிலையங்களில் மன்னார் மாவட்ட பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.என்.கில்றோய் பீரீஸ் தலைமையில் குறித்த பரிசோதனைகள் இடம் பெற்றுள்ளது.

இதன் போது மக்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் குறித்த பரிசோதனைகள் இரகசியமாகவும்,பொதுவாகவும் இடம் பெற்றதோடு, பரிசோதித்து ஒரு சில நிமிடத்துக்குள் இந்த நோயால் அந்த நபர் பீடித்து இருக்கின்றாரா ? இல்லையா? என்பதனையும் இரகசியமான முறையில் தெரியப்படுத்தியுள்ளனர்.

குறித்த பரிசோதனைகளின் போது பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More