180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிறுவர் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் தொலை பேசி உரையாடலை பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஊடகங்களுக்கு பகிரங்கமாக தெரியப்படுத்தியதனை நாம் இனவாத ரீதியான செயற்பாடாகவே பார்க்கின்றோம் என விஜயகலா மகேஸ்வரனின் மைத்துனனும் , ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான தியகராஜா துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
மேலும் தெரிவிக்கையில் ,
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க எமது குடும்ப நண்பர். அந்த வகையிலையே அன்றைய தினம் விஜயகலா மகேஸ்வரன் அவருடன் தொலைபேசியில் உரையாடி இருந்தார். அந்த உரையாடலை ஊடகவியலாளர் சந்திப்பில் பகிரங்கமாக விட்டுள்ளார் எனும் தகவல் அப்போது விஜயகலா மகேஸ்வரனுக்கு தெரியாது.
ஒரு நடிகரை பிரதி அமைச்சராக கொண்டு வந்தது எங்கள் கட்சி செய்த பிழை அதனால் தான் அவருக்கு ஊடக அறம் இல்லாது விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறும் வகையில் செயற்பட்டு உள்ளார். அந்த செயற்பாட்டுக்காக தற்போது அவர் மனம் வருந்தி உள்ளார் என அறிந்து கொண்டோம்.
அன்றைய தினம் அவர் அவ்வாறு உரையாடிமை பிரச்சனையை பூதாகரமாக்கும் நோக்குடன் தான். அது அவருக்கு பின்னால் உள்ளவர்களை அமைச்சு பதவியில் இருந்தும் நோக்கமாக கூட இருக்கலாம். அவரின் அந்த செயற்பாடு இன வாத செயற்பாடாகவே பார்க்கின்றோம். அவரின் செயற்பாட்டுக்கு முற்றாக எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.
Spread the love
1 comment
If we allowed those 8th standard uneducated so call guys cum actors like whom that Subramaniya swami blastic those south indian actors including Rajani kanth and Kamalahasan fools mutal payalhal. Though now Mr. Ranjan as well falls into that category Muttal fool who those buggers are ruling even the high schoolers who ever residents of our mother Sri Lanka. This is ill fate of democracy made those uneducated fools elected in the electoral process practice in Sri Lanka in democratic stream. May God bless mother Sri Lanka.