கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை இந்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி குற்றம் சுமத்தியுள்ளார். தனது ருவிட்டர் பக்கத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்;.
பெங்களூருவில் சமீப காலமாக கோல் டாக்சியில் செல்லும் பெண்களிடம் அதன் சாரதிகள் அத்துமீறி நடக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் கர்நாடக அரசு பெண்களின் பாதுகாப்பில் உரிய அக்கறை செலுத்தவில்லை என தெரிகிறது எனவும் எனவே, இதுபோன்ற முக்கியமான வி விடயங்களில் முதலமைச்சர் குமாரசாமி கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.