Home இந்தியாஅரியானாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வாகன உரிமம் ரத்து – ஓய்வூதியமும் இல்லை

அரியானாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வாகன உரிமம் ரத்து – ஓய்வூதியமும் இல்லை

by admin


அரியானா மாநிலத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வாகன உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் ஓய்வூதியமும் வழங்கப்பட மாட்டாது என அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார்.

அரியானா மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் புதிய முறையினை கையாளும் நிலையில் அவர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.  பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு வாகன உரிமம், துப்பாக்கி உரிமம், வயதானவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான ஓய்வூதியம் அனைத்தும் ரத்து செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் வழக்கின் தீர்ப்பு வரும் வரையில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு இந்த வசதிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்படும் எனவும் விசாரணை முடிவில் குற்றவாளி என நிரூபணமாகி, தண்டனை வழங்கப்பட்டால் எந்த காலத்திலும் இழந்த சலுகைகளை அவர்களால் பெற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டம் வரும் சுதந்திர தினமான ஓகஸ்ட் 15 ம் திகதி அல்லது ரக்ஷா பந்தன தினமான ஓகஸ்ட் 26 ம் முதல் ஆரம்பமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் காவல்நிலையத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் மற்றும் ஈவ்டீசிங் வழக்குகள் தடையின்றி விசாரிக்கப்படும் எனவும் விசாரணை அதிகாரிகள் பாலியல் குற்ற வழக்கு விசாரணையை 1 மாதத்திலும் மற்றும் ஈவ்டீசிங் வழக்கு விசாரணையை 15 நாட்களிலும் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ள முதலமைச்சர் இது குறித்து பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்ற நீதிபதிகளை விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More