ஆழ்வார் பேட்டை ஆண்டவா என தொண்டர்கள் அழைப்பதை நிறுத்த அறிவுறுத்துவேன் நடிகரும் மக்கள் மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தெரிவித்துள்ளார். அத்துடன் கமலை போலி பகுத்தறிவாளன் என்று கூறிய பா.ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசைக்கு, கமல் பதிலளித்துள்ளார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறும்போது, ‘ஒரே நேரத்தில் சட்ட மன்றங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்தக் கூடாது. லோக் ஆயுக்தா சட்டம் நீர்த்து போன நிலையில் உள்ளது என்று தெரிவித்தார்.
அத்துடன் தன்னை போலி பகுத்தறிவாளன் என்று கூறுவதற்கு தமிழிசைக்கு என்ன உரிமை உள்ளது என்றும் கமல் கேள்வி எழுப்பினார். தான் பகுத்தறிவாளன் என்றும் ஏழ்மையையும், ஊழலையும் ஒழிக்கவே அரசியலுக்கு வந்தாகவும் கூறிய அவர் மூட நம்பிக்கைகளை ஒழிக்க அல்ல என்றும் தெரிவித்தார்.