தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் தனியார் கல்லூரி ஒன்றில் பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டபோது லோகேஸ்வரி என்ற மாணவி உயிரிழந்தமை குறித்து கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்இ மாணவி லோகேஸ்வரி உயிரிழந்தது துரதிஷ்டவசமானது என்றும்இ வருத்தமளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும்இ பயிற்சியின்போது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பங்கேற்கவில்லை எனவும்இ கல்லூரியில் பயிற்சி அளித்த ஆசிரியருக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 2 தனிப்படைகளை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது மாடியில் இருந்து பேரிடர் காலங்களில் எப்படி தப்பிப்பது என்பது பற்றி செய்முறைப்பயிற்சி அளிக்கப்பட்ட போது லோகேஸ்வரியை இரண்டாவது மாடியில் இருந்து குதிக்குமாறு கூறிய பயிற்சியாளர் அவரை கீழே தள்ளியுள்ளார். இதன்போது மாணவி நிலை தடுமாறி முதல் மாடியில் இருந்த மழைத் தடுப்பு அமைப்பு மீது மோதி விழுந்த நிலையில் பின் தலையிலும் வலது கழுத்துப்பகுதியிலும் அடிபட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது