கேரளா செல்லும் புகையிதத்தில் கடத்தப்பட்ட 108 சிறுவர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தில் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் சிலர் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சிறுவர்களை மீட்டுள்ளதாக ஜார்க்கண்ட் மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சிறுவர்கள் 7 முதல் 17 வயது வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர்கள் எல்லோரும் ஒரு முஸ்லிம் மதரஸாவுக்கு கடத்திச் செல்வதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சிறுவர்களுடன் செனற் 6 பேரை கைது செய்து விசாரித்து வருவதாகவும் சிறுவர்களை அழைத்துச் செல்வதற்கான ஆவணங்கள் அவர்களிடம் காணப்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் அனைவருமே மௌலவிகள் எனவிசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து அவர்கள் மீது சிறுவர்கள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மீட்கப்பட்ட சிறுவர்கள் குழந்தை நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு அருகிலுள்ள சிறுவர்கள்விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 5-ம் திகதியும் முசாபர்பூர்-பாந்த்ரா ஆவாத் எக்ஸ்பிரஸ் புகையிரதத்தில் 18 வயதுக்குட்பட்ட 26 சிறுமிகள் கடத்தப்பட இருந்த நிலையில் புகையிரத காவல்துறையினர் அவர்களை மீட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது