குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
காணாமற் போனோர்களைப் பற்றிய அலுவலகம் ஏற்பாடு செய்த காணாமற் போனோரின் உறவினர்களுடனான சந்திப்பு பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த இன்றைய சந்திப்பிற்கு காணாமற் போனோரின் உறவினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு மண்டபத்திற்கு வெளியிலும் உள்ளுக்குள்ளும் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
இவ்வாறு ஒரு பகுதி மக்கள் அந்த அலுவலகம் தேவையில்லை எனவும், ஏமாற்றும் வித்தை எனவும் தெரிவித்து அலுவலகத்தினுடனான சந்திப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் மற்றுமொரு பகுதி மக்கள் தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்தாலும் அந்த அலுவலகத்தினூடான சந்திப்பில் கலந்து கொண்டு தமது பிரச்சனைகள் தேவைகளைத் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறு ஒரு பகுதியினர் சந்திப்பை புறக்கணித்து வெளியில் போராட்டத்தில் ஈடுபட்ட அதே வேளையில் இன்னொரு பகுதியினர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த்தும் பிரச்சனைகள் பற்றி கலந்துரையாடியும் உள்ளனர்.
1 comment
காணாமல் போன தமிழர்களை கீழே கொடுக்கப்பட்ட மாதிரி வகைப்படுத்தலாம் என்று நினைக்கின்றேன்.
1.மறைக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட பலர்.
2.தாய்மார்களால் இராணுவத்தினரிடம் கொடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிள்ளைகள்.
3.பல ஆண்டுகளாக தொடர்ச்சியான சித்திரவதைக்கு உள்ளாகி மெதுவாக இறந்து போன பலர்.
4.போரின் முடிவிற்கு முன்னரும் பின்பும், கொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிகள்.
மேலே கூறிய தமிழர்கள் பற்றிய நியாயமான விவரங்களையாவது அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.