163
கியூபாவில் புதிய அரசமைப்பு சட்டம் ஒன்று உருவாக்கப்படுகின்றது. பல தொலைநோக்கு சிறப்பம்சங்களுடன் தயாரிக்கப்படும் கியூபாவின் இந்த புதிய அரசமைப்பு சட்டத்தில், தனியார் நிலங்களை முதன் முறையாக சட்டரீதியாக அங்கீகரிக்கும் முடிவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 1959ஆம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோ பதவிக்கு வந்தவுடன் தனியார் நிலங்கள் வாங்குவதற்கும், விற்பதற்கும் தடைவிதித்திருந்தார். எனினும் கடந்த 2011ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தத்தின் மூலம் அத்திட்டம் முடிவுக்கு வந்திருந்தது. இந்நிலையில் இந்தி புதிய அரசமைப்பு சட்டம் உருவாக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love