1.2K
வடகிழக்கு மாலியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அந்நாட்டின் கவுமாகா என்ற கிராமத்தில் உள்ள அல்-கொய்தா அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதிகள் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து ராணுவம் மற்றும் ஐ.நா. அமைதிப்படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கவுமாகா கிராமத்தினுள் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளனர். இதன் போது 14 பேர் கொல்லப்பட்டதுடன் பல வாகனங்களும் எரித்து சேதமாக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love