ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ மறுப்புத் தெரிவித்துள்ளார். முகபுத்தகம் மற்றும் ருவிட்டர் பக்கம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் இவர் இந்த மறுப்புக் குறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால், வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அறிக்கையில், 2020 ஜனாதிபதி வேட்பாளராக,தஎன்னுடைய பெயர் இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன எனவும் இது முற்றிலும் பொய்யானதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்களை திசைதிருப்பி, குழப்பமான அரசியல் நிலைமையொன்றை ஏற்படுத்துவதற்காக ஒரு தரப்பினரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கையதகவே இதனை தான் பார்ப்பதாகவும் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.