Home இலங்கைபோதைப்பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் 7 பேர் தமிழர்

போதைப்பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் 7 பேர் தமிழர்

by admin


போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான 18 பேர்களின் பெயர்களின் பெயர்ப்பட்டியல் சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 7 பேர் தமிழர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

2003ஆம் ஆண்டு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள ஸ்ரீ தர்மாகரன், 2007ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள வேலாயுதன் முரளிதரன், 2009 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள சிவனேசன் ராஜா, 2012ஆம் ஆண்டு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள எஸ். புண்ணியமூர்த்தி, எஸ்.கணேசன், மற்றும் 2013ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள டபிள்யு. விநாயக மூர்த்தி மற்றும் எஸ்.ஏ. சுரேஸ் குமார் ஆகிய 7தமிழ் கைதிகளின் பெயர்களே இவ்வாறு மரண தண்டனை அமுல்படுத்தப்படவுள்ள கைதிகள் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More