பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு மண்ணெண்ணை ஒரு லீட்டருக்கு ரூபா 23.89 நட்டம் ஏற்படுவதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் மைத்திரி ஜயந்த சமரவீர எழுப்பிய கேள்விக்கு பதிலளத்தி போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
விலை அதிகரிக்கப்பட்ட மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலையை மீனவர்களின் கேரிக்கையினால் ரூபா 70 ஆக குறைத்தோம். ஆனால் எமக்கு தற்போதும் மண்ணெண்ணெய் லீட்டருக்கு ரூபா 93.89 ஓதுக்கவேண்டியுள்ளது. எவ்வாறாயினும் நாங்கள் நட்டத்திலேயே ஒரு லீட்டரை ரூபா 70 விற்கு விநியோகிக்கின்றோம். எனத் தெரிலித்துள்ளார்.
மேலும் எரிபொருள் சூத்திரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் உங்களுக்கும் அது பற்றி அறிவிக்கப்படும். பெரும்பாலும் எரிபொருள் சூத்திரம் திறைசேரியினால் தீர்மானிக்கப்படும். நாம் உலக சந்தையில் எரிபொருள் விலை உயரும் போது உள்நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கவும், உலக சந்தையில் எரிபொருள் விலை குறையும் போது உள்நாட்டில் எரிபொருள் விலை குறையும் வகையில் எரிபொருள் சூத்திரத்தை வடிவமைத்துள்ளோம். நாம் அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் அதற்கான குழுவை அமைத்துள்ளோம். அந்தக் குழுவால் வழங்கப்படும் ஆலோசனைக்கமைவாகவே விலையின் ஏற்ற இறக்கம் தொடர்பாக தீர்மானிக்கப்படும்.என்றார் அமைச்சர்.