குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் செயற்பாடற்ற சங்கம் எனவும் கடந்த 2006,2007 க்கு பின்னர் அதென் செயற்பாடுகள் தொடர்பில் எவ்வித ஆவணங்களும் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை எனவும் இலங்கை தொழிற்சங்க ஆணையாளர் கோ.பி.மனோஜ் பிரியந்த தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் தொடர்பில் தகவல் அறியும் சட்டத்தின் கோரப்பட்ட தகவலுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு அறிவித்துள்ளார்.
குறித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மேற்படி சங்கமானது இறுதியாக வருடாந்த அறிக்கை கடந்த 2006 மற்றும் 2007 காலப்பகுதிக்கானதே சமர்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சங்கத்திற்கு அறிவித்த போதும் அதற்கு பின்னர் எவ்வித ஆவணங்களும் சமர்பிக்கப்படவில்லை எனவே சங்கமானது செயற்பாடற்ற சங்கமாகவே கருதப்படுகிறது.
எனவே இது தொடர்பில் 25-06-2018 சங்கத்தின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவும் அப்பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் தொடர்பில் பல தரப்பினர்களாலும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. தொடர்ச்சியாக சங்கத்தின் நிர்வாகத்தில் ஒருவர் நீண்டகாலமாக அதிகாரம் செலுத்தி வருகின்றார் எனவும், ஜனநாயக முறைப்படி புதிய நிர்வாகத் தெரிவுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.