பிரான்ஸ் அணியின் இளம் வீரரான கிலியான் மப்பே ( Kylian Mbappe ) தனது உலகக்கிண்ண சம்பளம் மற்றும் போனஸை தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். உலகக்கிண்ண கால்பந்து தொடரில் சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றிய பிரான்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த 19 வயதே மப்பே திறமையான போட்டியினை வெளிப்படுத்தியிருந்தார்.
உலகக்கிண்ண கால்பந்து தொடர் ஆரம்பமாவதற்கு முன்னரேயே அதன்மூலம் கிடைக்கும் சம்பளம் மற்றும் போனஸை மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான விளையாட்டு திறனை பயிற்சிக்கும் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப் போவதாக அறிவித்திருந்தார்.
அந்தவகையில் உலகக்கிண்ண கால்பந்து தொடரில் விளையாடியதன் மூலம் கிடைத்த 5 லட்சத்து 53 ஆயிரம் டொலர்களையும் தற்போது நன்கொடையாக வழங்கியுள்ளார்.