யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில், கல்வி பயிலும் மாணவிகள் இருவரை ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக யாழ்.காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏழாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவிகள் இருவரை அப்பாடசாலையில் கல்வி கற்பிக்கும் 48 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவரே பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து யாழ்.மாவட்ட செயலக சிறுவர் பாதுகாப்பு பிரிவினரால் யாழ்ப்பாண காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
ஆசிரியர் மீதான இந்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறையினர் அப்பாடசாலையில் கல்வி கற்பித்து வந்த 48 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட ஆசிரியரை இன்று யாழ்ப்பாணம் நீதி மன்றத்தில் முற்படுத்த காவற்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.