Home இலங்கைமுல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் புலிகளின் வெடிபொருட்கள் மீட்பு….

முல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் புலிகளின் வெடிபொருட்கள் மீட்பு….

by admin

முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் அபாயகரமான வெடி பொருட்கள் சில நேற்று (18.07.18 ) மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு காவற்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

தனியார் ஒருவர் தனது காணிக்குள் இருந்த கிணறு ஒன்றை, அகழ்ந்து சீராக்க முயற்சித்துள்ளார். இதன் போது கிணற்றுக்குள் அபாயகரமான வெடி பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து சுதந்திரபுரம் மத்தி பகுதியில் நிலைகொண்டிருந்த கடற்படையினரிடம் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வடக்கு கடற்படை உயர் அதிகாரி விக்ரம்சிங்க தலைமையில், நேற்று (18) அந்த பகுதிக்கு சென்ற காவற்துறையினரும்,   கடற்படையினரும் இராணுவத்தினரும் அகழ்வு பணியில் ஈடுபட்டனர். இதன்போது விடுதலைப் புலிகளினால் தயாரிக்கப்பட்ட பசீலன் 2000 ஆட்லறி செல் இரண்டு உள்ளிட்ட வெடி பொருட்கள் சில மீட்க்கப்பட்டன.

மேலும் இந்த அகழ்வு பணி நேற்று பிற்பகல் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன் இன்று காலை மீண்டும் தொடரும் என புதுக்குடியிருப்பு காவற்துறையினர்  தெரிவித்துள்ளனர். இந்த  அகழ்வுப் பணி நீதிமன்றத்தின் அனுமதியுடன் நேற்று ஆரம்பமாகியதுடன் சம்பவ இடத்திற்கு நீதிமன்ற பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More