புத்தளம் தில்லையடி பிரதேசத்தில் நேற்று மாலை ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 02 கிலோ 560 மில்லிகிராம் எடையுடைய ஹெரோய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக புத்தளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
போதை தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் வேறு பிரதேசங்களில் இருந்து ஹெரோய்ன் போதைப் பொருளைக் கெண்டுவந்து அந்த பிரதேசத்தில் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் இன்று புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love
Add Comment