கடத்தல்காரர்கள் இருவர் கைது:- காணொளி இணைப்பு..
மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த நான்கு கோடி மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய நாட்டு படகையும் பறிமுதல் செய்த மண்டபம் மெரைன் காவற்துறையினர் கடத்தல்காரர்கள் முவரை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு நாட்டு படகில் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் கடத்த இருப்பதாக மெரைன் காவற்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனையடுத்து மண்டபம் மெரைன் காவற்துறையினர் பாம்பன் கடலோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதன்போது பாம்பன் அருகே முயல் தீவு கடற்கரை பகுதியில் இருவர் நாட்டுபடகுடன் சந்தேகத்திற்க்கு இடமாக நின்று கொண்டிருந்தனர் அவர்கள் மெரைன் காவற்துறையினரைக் கண்டதும் கடலில் குதித்து தப்ப முயற்ச்சித்துள்ளனர். அவர்களை மடக்கி பிடித்த மெரைன் காவற்துறையின ர்,நாட்டுபடகை சோதனை செய்து பார்த்தத போது அதில் 26 சாக்கு மூட்டைகளில் இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 1300 கிலோ தடை செய்யப்பட்ட பதபடுத்தப்பட்ட கடல் அட்டைகள் வைத்து இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கடல் அட்டைகளையும் கடத்தலுக்கு பயண்படுத்திய நாட்டுபடகையும் பறிமுதல் செய்த மண்டபம் மெரைன் காவற்துறையினர் மலையாண்டி,காசீம் ஆகிய இரண்டு கடத்தல்காரர்களையும் கைது செய்தனர். .பின்னர் வழக்கு பதிவு செய்த மெரைன் காவற்துறையினர், கைது செய்யப்பட்ட கடத்தல் காரர்களுக்கும் இலங்கையை சேர்ந்தவர்களுக்கும் எதேனும் தொடர்பு உள்ளதா அல்லது தமிழக கடலோர மாவட்டத்தில் இலங்கையை சேர்ந்த கடத்தல் ஏஜென்டுகள் யாரும் பதுங்கி உள்ளனரா என்ற கோணத்தில் விசாரனை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு சுமார் நான்கு கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரனைக்கு பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் கைது செய்யபட்டவர்களை மண்டபம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட உள்ளனர்.