தமிழ் சினிமாவில் வரும் கதாநாயகிகளின் திருமண வயதைப் பற்றி பேசும் அளவிற்கு நாயகர்களின் திருமண வயது பற்றி பேசப்படுவதில்லை என்று இந்திய சினிமா இணையத்தளம் ஒன்று குறிப்பிடுகின்றது. அத்துடன் அண்மைக்காலத்து தமிழ்சினிமா நாயகர்கள் திருமணத்தை தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் இருக்கும் பலர் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வருகிறார்கள். 30 வயதானாலே கதாநாயகிகள் திருமணம் பற்றி பேசும் சூழலில் கதாநாயகர்கள் 35 வயதை தாண்டியும்கூட திருமணம் பற்றி யோசிக்காமல் உள்ளனர்.
நடிகர் ஆர்யா, விஷால், ஜெய், சிம்பு என பல முன்னணி நாயகர்கள் திருமணம் ஆகாத நிலையில் உள்ளனர். இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். அத்துடன் அதர்வா, கவுதம் கார்த்திக் என இளம் கதாநாயகர்கள் இன்னமும் திருமணம் செய்யாமலேயே இருக்கின்றனர்.