வட மாகாண பாடசாலை மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை உயர்த்தும் நோக்கில் வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் கல்வி சாரா ஊழியர்களுக்கான நடமாடும் சேவையும், வடக்கு மாகாண க.பொ.த சாதாரண தர மாணவர்களின் பரீட்சை அடைவு மட்டத்தை உயர்த்துவதற்கான பகுப்பாய்வும் செயலமர்வும் இன்று தென்மராட்சி கல்வி வலயத்தில் இடம் பெற்றது.
இதில் தென்மராட்சி கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலை அதிபர்களுக்கான விசேட செயலமார்வு காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 1.30 மணிவரை இடம்பெற்றது. இந்த செயலமர்வில் அடுத்து வரும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் தென்மராட்சி கல்வி வலய மாணவர்கள் ஒவ்வொருவரும் ஆய்வுக்கு உற்படுத்தப்பட்டு அவர்கள் எந்தெந்த பாhடங்களில் குறைவான மதிப்பெண்களைப்பெறுவார்கள் என்பது பற்றியும், அவர்களின் பெருபேறுகளை உயர்த்துவதற்கு பாடசாலை அதிபர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைள் குறித்தும் அதிபர்களுக்கு விரிவாக புள்ளி விபரங்களுடன் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மாலை 2.30 தொடக்கம் கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர்கள் அதிபர்களுக்கான நடமாடும் சேவை இடம்பெற்றது. இதில் 32 மேற்பட்ட முறைப்பாடுகள் அதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்வி சாரா ஊழியர்களால் அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு உடனடியாகவே 26 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இன்றைய அதிபர்களுக்கான செயலமர்விலும்,நடமாடும் சேவையிலும் வடக்கு மாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமச்சர் கலாநிதி க.சர்வேஸ்வர்,கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன்,மாகாண கல்விப்பணிப்பாளர் உதயகுமார்,கல்வி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் அனந்தராஜ், தென்மராட்சி வலய கல்விப் பணிஜப்பாளர் சுந்தரசிவம் மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள்,மாகாண கலவித்திணைக்கள அதிகாரிகள் தென்மராட்சி வலயக்கல்விப்பணிமனை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.