Home இந்தியா சிறந்த நடிகருக்கான சர்வதேச விருதுக்கு விஜயின் பெயர் பரிந்துரை…

சிறந்த நடிகருக்கான சர்வதேச விருதுக்கு விஜயின் பெயர் பரிந்துரை…

by admin

சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகருக்கான ஐஏஆர்ஏ என்ற விருதுக்கு நடிகர் விஜய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். `மெர்சல்’ திரைப்படமே இவ் விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்ட்டுள்ளது.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் 100 ஆவது திரைப்படமாக மெர்சலை வெளியிட்டது. இளம் இயக்குனர் அட்லி இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இத் திரைப்படத்தில் விஜய்  மூன்று வேடத்தில் நடித்திருந்தார்.

விஜயின் நாகயிகளாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்களும் பெரும் வரவேற்றை பெற்றிருந்தன.

இந்த நிலையில்,  மெர்சல் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் விஜய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அதற்காக இணையதளத்தில் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் நடிகர் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்படுவார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More