ஐக்கிய நாடுகள் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தம் மூலம் இஸ்ரேலுக்கும்இ ஹமாஸ் போராளிகளுக்குமிடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் காசா எல்லையில் ஓரளவு அமைதி நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவரும் நான்கு பாலத்தீனர்களும் கொல்லப்பட்ட மோதலுக்குப் பின்னர் தற்போது இவ்வாறு அமைதி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
எல்லையில் ஊடுருவ பாலத்தீன தீவிரவாதிகள் முயற்சித்ததாக கூறிய இஸ்ரேல் ராணுவம் அதற்கு பதிலடியாக ஹமாஸ் நிலை ஒன்றில் தாக்குதல் மேற்கொண்டிருந்தமையானது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயலாக அமைந்திருந்தது. எல்லையில் இஸ்ரேலிய ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து காசாவிலுள்ள பல இலக்குகள் மீது இஸ்ரேலிய படையினர் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.
2014ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போருக்கு பின்னர் காசாவிலும் அதனை சுற்றியுள்ள இடங்களிலும் முதல் முறையாக ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.