Home இலக்கியம் சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகமும் அதிதி உரைத் தொடர்களும் –  வானதி பகீரதன்…

சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகமும் அதிதி உரைத் தொடர்களும் –  வானதி பகீரதன்…

by admin

சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம்  கிழக்குப்பல்கலைக்கழகம்.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் அதிதி உரைத் தொடர்களை கடந்த மூன்று வருடங்களாக மிகச் சிறப்பான முறையில் நடாத்தி வருகின்றது. நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி. ஜெயசங்கர் அவர்களின் வழிகாட்டுதலினாலும் ஆலோசனைகளினாலும் இவ் அதிதி உரைத் தொடாகள் தொடர்ச்சியான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்றன. உள் நாட்டிலும் வெளிநாடுகளிலிருந்தும் பல்வேறு தேவைகளுக்காகவும் நோக்கங்களுக்காகவும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் புலமையாளர்களும்வருகைதருகின்ற போது அச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவர்களை எமது நிறுவகத்திற்கு அழைத்து வந்து நிறுவக கல்விப்புலம் சார்ந்தவர்கள், கல்விப்புலம் சாராதவர்கள் என அனைவரும் பயன்பெறும் வண்ணம் அதிதி உரைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதன் மூலம் எமது நிறுவகம் உயர்கல்விச் சமூகத்தின் கலை மற்றும் ஆய்வறிவுச் செயற்பாடுகளை இனங்காணவும, வளர்க்கவும், ஊக்குவிக்கவும் முனைகின்றது.

இவ் அதிதி உரைகள் இளம் விரிவுரையாளர்களதும் மாணவர்களதும் அறிவுப்புலத்தை வளர்க்கவும் வலுப்படுத்தவும் உதவுவுதோடு சிறந்த புலமையாளர்களின் அறிமுகத்தைப் பெற்றுக் கொள்வதோடு அவர்களது சொற்பொழிவுகளை, உரைகளை செவிமடுப்பதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக்;கொடுக்கின்றது.அந்த வகையில் எமது நிறுவகத்தின் முதலாவது அதிதி உரை பேராசிரியை உமா குமாரசுவாமி அவர்களினால் ‘சமூகத்தை நோக்கிய உச்சஅடைவும் ஈடுபாடும்’ என்ற தொனிப்பொருளில் 01.02.2016 அன்று நிகழ்த்தப்பட்டது.

இரண்டாவது அதிதி உரை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிறின்ஸ் காசிநாதர் அவர்களினால் ‘மட்டக்களப்பின் பாடும் மீன்கள் உண்மையா? புனைவா?’ என்னும் தலைப்பில் 17.12.2016ல் இடம் பெற்றது.

மூன்றாவது அதிதி உரை கலாநிதி தர்ஷன் அம்பலவாணர் அவர்களினால் ‘இன்றைய பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களின் வகிபாகமும் அவர்களின் பொறுப்புக்களும்’ என்ற தலைப்பில் 02.03.2016 உரையாற்றப்பட்டது.

30.03.2016ல் நான்காவது அதிதித் தொடர் கலாநிதி கிரண் கிரவல் (சிரேஷ்ட ஆய்வாளர் சமூக நீதி தொடர்பான நிறுவனம்)அவர்களினால் ‘அழகியலும் அரசியலும் தொடர்பாக – சமத்துவ அடிப்படையின் வெளிப்படுத்தலாக கிராமியக் கலை மற்றும் ஆற்றுகைகளை வெளிப்படுத்தல்’என்ற தலைப்பிலும்உரையாற்றப்பட்டது.
20.04.2016ல் ஐந்தாவது அதிதித் தொடருரை திரு சந்திரகுப்த தேநுவர அவர்களால் ‘கவிஞர் என்பவர் ஒரு செயற்பாட்டாளர்’ என்ற தலைப்பில் உரையாற்றப்பட்டது.
27.04.2016ல்ஆறாவது அதிதித் தொடருரையை பேராசிரியர் எம். எஸ்.எம் அனஸ் அவர்கள் ‘இஸ்லாமிய கலைகள் என்னும் பதத்தை விளங்கிக் கொள்வதில் உள்ள இடர்பாடுகள்’என்ற தலைப்பில் நிகழ்த்தினார்.

ஏழாவது அதிதித் தொடருரை 11.05.2016 அன்று பேராசிரியர் சிவசேகரம் அவர்களால் ‘செவ்வியற் கலைகளும் சமூகக் கலைகளும் பயனற்ற ஒப்பீடுகள்’ என்ற தலைப்பில் இடம்பெற்றது.

25.07.2016 ல் போசிரியை கமலா விஸ்வேஸ்வரன் அவர்களினால் ‘கலை வளங்களுக்குரிய நாட்குறிப்பின் பிரதிபலிப்பு’ என்ற தலைப்பில் அதிதி உரை இடம்பெற்றது. இந்த அதித உரைப் பின்னணியின் தொடர்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை (20.07.2018) அன்று கலாநிதி பிரெண்டா பெக் அவர்களினால் அதிதி உரை நிகழ்த்தப்பட்டது.
இவரது அதிதி உரை மாத்திரம் ஏன் இங்கு விரிவாக நோக்கப்படுகின்றது என பலரும் வினா எழுப்பலாம். இதுவே தற்போது (20.07.2018) அன்று நிகழ்த்தப்பட்டமையால் இவரது உரையின் சாராம்சத்தை தருகின்றேன். இவர் ‘தமிழ் நாட்டார் காவியம் அண்ணன்மார் கதையினூடாக நவீன சமூகப்பிரச்சனைகளை விளங்கிக் கொள்ளல்’ என்ற பொருண்மையில் தமது உரையினை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தினார். பிரெண்டா ஈ. எப். பெக் அவர்களது உரையின் சாரம்சத்தை விளக்குவதற்கு முன்னர் அவரைப் பற்றிய ஒரு பொது அறிமுகத்தை இங்கு தருகின்றேன்.

கலாநிதி பிரண்டா ஈ.எப்.பெக் அவர்கள் ஒரு மானிடவியலாளராவாh.; இவர் காங்கேயத்துக்கு அருகில் உள்ள ஓலைப்பாளையம் கிராமத்தில் வாழ்ந்து தனது முனைவர் பட்ட ஆய்வை நிகழ்த்தி ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அவருடைய பட்ட ஆய்வின் தலைப்பு கொங்கு நாட்டின் பொதுமன அமைப்பு என்பதாகும். அவர் தனது பட்ட ஆய்வை கொங்கு நாட்டின் குடியானவர் சமூகம் என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார்.

இவர் தென்னாசியா மற்றும் தமிழ் நாட்டைப் பற்றி வாழ் நாள் பூராகவும் ஆராய்ந்தவர். டொக்டர் பெக்குக்கு தென்னாசிய புராணவியல் பற்றி அதிலும் குறிப்பாக தமிழ்நாடடின் நாட்டார் கதைகள் பற்றி ஈடுபாடு உண்டு. அவர் இந்தியத் தேவதைகள் மிருக உருவங்கள் தொடர்பாக பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் கதைகளில் விபரிக்கப்படும் திருவிழாக்களில் சித்தரிக்கப்படும் காவிய மாந்தர்கள் பற்றி ஆழமாக ஆராய்ந்துள்ளார். பிரெண்டா கனடா ரொரண்டே பல்கலைக்கழகத்தில் மானிடவியல் துறையின் இணைப்பேராசிரியராகவும் எல்லா மட்டங்களிலும் கதை சொல்லலை அறிமுகம் செய்யும் கில்டன் நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றுகிறார். கடந்த மூன்று வருடத்தில் முனைவர் பிரெண்டா யு.எஸ் கனடா தமிழ் நாடு, மலேசியா ஆகிய நாடுகளில் வாழும் தமிழ் சமூகத்திடம் இருந்து விருதுகள் பல பெற்றுள்ளார்.

தற்போது முனைவர் பிரெண்டா பேராசிரியர் வி.செல்வநாயகம் நினைவு விருதை மானிடவியல், நாட்டாரியல் துறைகளில் தனித்துவமான தமிழ்ப் புலமையை வெளிப்படுத்தியமைக்காகப் பெறவுள்ளார். அண்ணன்மார் கதை என்ற தமிழ் நாட்டார் காவியத்தை வெளியிட எட்டு ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டமை இங்கு முக்கியமாக கருத்தில் கொள்ளப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக தமிழ்நாட்டார் இலக்கியத்திற்கு உலக அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது தமிழர்களிடையே முக்கியமாகப் புலம் பெயர்ந்த தமிழரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்தகைய சிறப்புக்களும் புலமையும் அமையப் பெற்ற கலாநிதி. பிரெண்டா பெக் அவர்களது அண்ணன்மார் கதை தொடர்பான உரையின் சாராம்சம் பின்வருமாறு ..

இவர் முதலில் அண்ணன்மார் கதை என்றால் என்ன? என்பதையும் அக்கதை பற்றிய அறிமுகத்தையும் செய்ததோடு இக் கதையில் அதிகம் அறியப்படாத பல விடயங்களைக் கட்டவிழ்ப்புச் செய்தார். இக்கதை உலகமடங்கிலுமுள்ள மக்களுக்கு பகிர்ந்து வாழ்தல் என்ற தமிழ் கலாச்சாரத்தின் வெற்றியை உணர்த்தி தமிழர்களை பெருமிதமடைய வைக்கிறது எனவும் தமது உரையில் குறிப்பிட்டார்.

பின்னர் எவ்வாறு, ஏன், எப்பொழுது இக்கதைப் பாடல் சேகரிக்கப்பட்டது என்பதையும் குறிப்பிட்டதோடு இந்த நாட்டார் கதைப் பாடல்கள் முதலில் ஒலிப்பதிவு நாடாவினைப் பயன்படுத்தி சேகரிக்கப்பட்டது எனவும் தனது னு.Phடைபட்ட கொங்கு நாட்டைப் பற்றிய ஆய்வின் போது 18 இரவுகளில் 36 மணித்தியாலயங்களில் ஒலிப்பதிவு நாடாவில் இக்கதை பதிவு செய்யப்பட்டது எனவும் அன்றிலிருந்து இன்று வரை இக்கதை தன் சிந்தையை கவர்வதாயும் சிந்தனையை கிளர்வதாயுமுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

பின்னர் ஏன் இக்கதை முக்கியமானது என்பதையும் விளக்கியதோடு இதன் முக்கிய கதைப் பொருள் கொங்கு பிரதேசத்தின் நிலவுடைமை குடும்பமொன்று மூன்று தலைமுறைகளில் படிப்படியாக சிதைந்து போவதை சொல்வதாகும். இந்த காவியம் உறவு முறை, ஜதிகம், புத்திசாலித்தனமான தலைமை, மனித குணபாவம், உலகியல்பு, என்பனவற்றைக் கொடுக்கிறது எனவும் தமது உரையில் முன்வைத்தார்.

இக்கதை எங்கெல்லாம் அறியப்பட்டுள்ளது? ஆவண வடிவிலாவது இக்கதை கொங்கு நாட்டிலிருந்து டெல்கி, யாழ்ப்பாணம், இலங்கையில் மலைநாடு, மலேசியா, கனடா, அமெரிக்கா ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளது என்பதையும் இன்று இக்கதையின் பொருத்தப்பாடு என்ன? என்பதையும் நவீன சமூகப் பிரச்சினைகளை விளங்கிக் கொள்வதற்கு இக்கதையைத் துணையாகக் கொள்ளலாம். என்பதையும் இக்கதையின் ஏழு பரிமாணங்களைப் பற்றியும் விளக்கினார்.

இக் கதை மூலம், சீர்படுத்தல், எதிர்வினை, மீண்டெழுதல், உறவு முறை, பிரதிபலிப்பு, வெளிப்பாடு என்பனவைபற்றி சுருக்கமாக எடுத்துரைப்பதாகவும் கூறினார். கனடாவில் இதனை எவ்வாறு பரீட்சார்த்தமாக கற்பிக்கிறார்கள்? இக்கதையில் அடங்கியுள்ள கருத்துக்கள் நவீன சமூகப் பிரச்சினைகளான சமூக நீதி, பெண்களை வலுப்படுத்தல் என்பனவற்றுக்கு வலுச் சேகர்ப்பதாக அமைந்துள்ளது. இக்கதை குடியேறும் குடும்பங்களின் அனுபவத்தோடு சம்பந்தமுறுகிறது. அவைவித்தியாசமான கலாச்சார சூழ்நிலையோடு இசைவாக்கிக் கொள்ளல்புதிய சூழ்நிலையை அடையாளம் காணலும் சாதித்தலும்இந்த அடிப்படையில் இளைஞர்கள் நவீன வாழ்க்கைக்கு அவாவுறுகின்றனர் எனவும் சுய பரிசோதனை செய்கின்றனர் எனவும் கூறினார்.

அவர் இந்தக் கதையை அமெரிக்காவுக்கு ஜரோப்பியர் வந்த போது ஏற்பட்ட சம்பவங்களுடன் ஒப்பிடுவதாகவும் வட அமெரிக்காவுக்கு ஜரோப்பிய குடியேறிகள் வந்து நிலங்களை ஆக்கிரமித்த போது இங்கே வாழ்ந்த சுதேச மக்கள் அவர்களை எதிர்த்தமை பற்றியும் அந்த எதிர்ப்புணர்வு இன்றும் ஆரம்ப அமெரிக்க சுதேசிகளுடன் காணப்படுகிறது என்றும் அதே டீபால் டிகாங்கு பகுதிகளில் நில ஆக்கிரமிப்பாளர் குடியேறிய போது அங்கு ஏற்கனவே வாழ்ந்த இனக்குழுமங்கள் அவர்களை எதிர்த்தனர் எனவும் குடியேறிகளின் பலத்துடன் அவர்களால் தாக்குப் பிடிக்காமல் போக கொங்கு நாட்டு மலைப் பிரதேசங்களில் போய் வாழத் தொடங்கினர் என்பதையும் அமெரிக்கப் பழந்குடிகள் போல இந்த கொங்கு மலை வாழ் மக்களும் நிலவுடமை மக்கள் மீது வெறுப்புணர்வைக் கொண்டவர்களாக உள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

பிரெண்டா இக் கதையை மீளச் சொல்லிய போது செய்த கலாசார பரிசோதனைகள் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
இவர் இந்த நாட்டார் கதையை 26 கிளைக்கதைகளில் ஒளிப்படமாக்கியுள்ளார். இதை இரு தொகுதிகளில் கிராபிக் நாவலாகவும் எழுதியுள்;ளார். அவர் கதை சொல்லலுக்கு அனுசரனையான வகையில் அட்டைகளையும் எழுதியுள்ளார். அவர் இக்கதை நிகழும் பூகோளத்தையும் முக்கிய சமூக மதிப்பீடுகளையும் உட்கொள்ளக் கூடியவாறு எண்மான விளையாட்டுக்களையும் வடிவமைத்துக் கொண்டுள்ளமை பற்றியும் உரையில் குறிப்பிட்டார். இக்கதைக் காட்சிகளை பார்த்துக் கொண்டிருக்கும் போது அதை வாசிக்கக் கூடியவாறும் தயாரித்துள்;ளதாகக் குறிப்பிட்டார். இன்னும் அண்மையில் அண்ணன்மார் கதையை கல்வி மற்றும் மருத்துவ நோக்கத்திற்காக விரும்பும் ஒருவருடன் இணைந்து வேலை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதை விட கனடாவில் உள்ள ஒரு நாடகக் குழு அண்ணன்மார் கதையின் ஒரு பகுதியை மேடையேற்ற முனைந்தபோது அவர்களுக்கு ஒத்தாசையாக செயல்பட்டமை பற்றியும் கூறியதோடு இது சம்பந்தமான விபரங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கிடைக்கின்றன எனவும் விளக்கினார்.

உலக அளவில் அதிகம் அறியப்பட்டிருக்கும் காவியங்களுடன் அண்ணன்மார் கதையை எவ்வாறு ஒப்பிடலாம்? என்று கேள்வி எழுப்பியதோடு அது உலக அளவில் இருக்கும் புராதான நாட்டார் காவியங்களில் தலைசிறந்து விளங்குகின்றது எனவும் இது சிறந்த கட்டமைப்பு கொண்டது வாழ்வின் உள்ளார்ந்த அடிப்படை உண்மைகளுடன் உள்ளார்ந்து இணங்கியும் நெருங்கியும் செல்வது எனவும் தனது வெளியீடுகள் சிலவற்றில் இதனை புராதான ஐஸ்லாந்து சாகல (இது பின்னர் ஐரோப்பிய இலக்கியத்தின் தோற்றத்துக்கு அடித்தளமாக அமைந்தது) காவியத்துடன் ஒப்பிட்டுள்ளதாகவும்; புனித பைபிளுக்கும் சாகல காவியத்துக்குமிடையே ஆச்சரியப்படத்தக்க ஒற்றுமைகள் காணப்படுகின்றன.எனவும் குறிப்பிட்டார்.

இவற்றை விட தென்னாசியாவின் மாபெரும் செவ்வியல் படைப்பான மகாபாரதத்திற்கும் இதற்குமிடையே காணப்படும் ஒற்றுமைகளை எடுத்துக் காட்டினார். இந்த ஒற்றுமைகளை உள்ளுர் பாடகர்கள் தங்கள் தனித்துவத்தையும் அடையாளத்தையும் இயைவுபடுத்தியுள்ளனர் எனவும் இந்த பொன்னிவள நாட்டுக்கதை கண்ணகி கதையோடும் சில சங்க பாடல்களோடும் ஒற்றுமை கொண்டது எனவும் கூறினார். இறுதியாக துருக்கியில் அகழ்வாராட்சியின்போது கிடைத்த கி.மு 9000 ஆண்டுகளுக்கு முற்பட்ட எச்சங்கள் இக்காவியத்தோடு ஒத்துள்ள தன்மை கண்டு அவர் வியப்படைவதாகவும் தற்போது பாக்கிஸ்தானில் புகழ்பெற்ற மொஹன்சதாரோ களிமண் இலட்சினைகளும் இக்கதையில் காணும் அம்சமும் இவ்விடம் திராவிட கலாசாரத்திற்குரியது (ஆரிய கலாசாரத்திற்குரியதல்ல) என்பதை நிரூபிப்பதை எடுத்துக் காட்டியுள்ளதாகவும் கூறினார். இவ்வாறு இந்த மாபெரும் தமிழ் மொழிக் காவியம் புராதனத்தின் சின்னங்களை தன்னுள் அடக்கியுள்ளது எனக் குறிப்பிட்டார்.

இக் கதை தொடர்பாக தான் எதிர் கொண்ட சவால்கள் பற்றிக் கூறும் போது வாய்மொழியாக வழங்கி வரும் காவியம் முக்கியமானதல்ல என்ற மக்களின் நம்பிக்கையை நீக்குவது அவர் எதிர்கொண்ட முதலாவது சவாலாகும். அவர்களில் அதிகமானவர்களுக்கு ஒரு ‘வாசிப்பு பிரதி’ தேவைப்பட்டது. இது சாத்தியமாகவில்லை என்றால் இம் முயற்சி பிரயோசனப்படாது என்றும் கூறினார்.

இன்னும் தமிழ் மக்கள் தங்களின் ‘வேரை’ செம்மொழி இலக்கியங்களிலும் செவ்வியல் கலை நடனங்களிலும் தேடிக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு தொலை தூரக் கிராம மொன்றில் வழங்கி வரும் ஒரு நாட்டார் காவியத்துக்கு முதன்மை கொடுக்க தேவையில்லை என்ற கருத்தையும் அவர் எதிர் கொள்ள நேரிட்டது எனக் கூறினார். ஒரு வேளை அக்காவியம் புராதனமாக இருந்தாலும் நவீன வாழ்கைக்கு பொருத்தமாக இருக்காது என்று மக்கள் கூறுவதையும் தான் கேட்டதாகக் கூறினார்.
நீதி மன்றங்களின் சட்டமுறைகளுக்கு வாய் மொழி வரலாறு போன்றவை பொருந்தி வராது என்றும் அவைகள் மனித சமூகத்தின் கலாச்சார வளர்ச்சியை பற்றி ஆய்வறிவு பூர்வமாக விளங்கிக்; கொள்ள உதவாது என்றும் மக்கள்; விவாதித்த தாகவும் அகடமிக் வட்டாரத்தில் உள்ளவர்களும் பொதுமக்களும் அவ்வாறான நம்பிக்கைகளில் ஆழ்ந்துள்ளனர் என்றும் வழமையான கல்வி, பணபலம், அதிகாரத்தோடு பலமாக இறுகிப் போயிருக்கும் நம்பிக்கைகளை உடைப்பது இலகுவான காரியமல்ல என்றும் கூறிய பிரெண்டா பெக் தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில முன்னேற்றங்களை செய்து எனது பணியை தொடர்வதாகவும்
அனைவரும் அண்ணன்மார் கதையைப் படித்து அதை மற்றவர்களிடம் சொல்லுதல் வேண்டும் என்றும் நீங்கள் அது போன்ற மற்றக் கதைகளையும் திரட்டல் வேண்டும் என்றும் கதை சொல்லும் உத்திகளையும் அறிதல் வேண்டும் என்றும் கூறினார்.

‘கதை’ கட்டித்த வடிவை கொண்டதும், நிரந்தரமானதும் என்றும்தான் எண்ணவில்லை என்றும் கதைகள் சொல்லப்பட்டு வரும் போது சூழலுக்கும் கேட்போருக்கும் இசைய மாறிக் கொண்டு வரும். இன்னும் நல்ல கதைகள் அறிவுறுதல்களையோ கறுப்பு, வெள்ளை என்ற திட்டமான வரையறைகளையோ கொண்டிருக்காது. சிறந்த கதையில் பாத்திரங்களின் குணவிகற்பங்களுக்கு காரணங்கள்இருக்கும் அவைகளில் தேவதைகளோ பிசாசுகளோ முதன்மை பெற்றிருக்காது. அவை கேட்போரை சிந்திக்கத் தூண்டும், மனதில் பாதிப்பை ஏற்படுத்தும். இவை கலந்துரையாடலாக இருந்நு சமூகப் பிரச்சினையை அலச இடம் தருதல் வேண்டும். சிறிய எளிய கதையாக இருந்தாலும் மறைபொருளையும் கருத்துக்களையும் வெளிப்படுத்த வேண்டும்.

எல்லா வளம் பொருந்திய கதைகளும் ஒருவரின் கலாசார முதுசங்களை பல்வேறு நோக்கில் காண அவருக்கு உதவுதல் வேண்டும். அவற்றைக் கேட்போர், திரும்பிச் சொல்வோர் யாவரும் சாதகமாக புதிய அர்த்தங்களைக் காண உதவதல் வேண்டும். எனக் குறிப்பிட்ட பிரெண்டா தான் தமிழ் நாட்டில் சமூக மானிடவியலாளராக பல வருடங்கள் இருந்து இக்கதை ஏற்படுத்திய இவ்வாறான தாக்கங்களை அவதானித்ததாகவும் இன்னும் தனது சொந்த கலாசார தொலைவு இக்கதையை பூரணமாக விளங்கிக் கொள்ள உதவுகிறது என்றும் கூறினார். ‘உள் ஆள்’ கண்ணுக்கு தெரியாத விடயங்கள் பல வெளி ஆள் கண்ணுக்கு தென்படும் என்றும் எனது பணிகள் உள் ஆள், வெளியாள் என்ற இரண்டு நிலைகளிலும் நடைபெறுகிறது எனவும் குறிப்பிட்டார்.

இவ் உரைமூலம் அண்ணன்மார் கதை என்ற ஒரு நாட்டார் காவியத்தை எத்தகைய கண்ணோட்டங்களி;ல் மீள்வாசிப்புச் செய்யமுடியும் என்பதையும் அதை தற்கால நவீன பிரச்சனைகளுடன் தெடர்புறுத்தி நோக்கமுடியும் என்பதையும் விளங்கிக் கொள்வதோடு மாணவர்களை புதிய நோக்கில் சிந்திக்கத் தூண்டும் ஒரு உத்தியாகவும் இதனைக் கொள்ளமுடியும். எனவே எமது நிறுவகத்தில்; இவ் அதிதி உரைத் தொடர்கள் நடாத்தப்படுவது வரவேற்கத்தக்கது எனலாம்.

தென்னிந்திய சடங்குகளில் சூடும் வண்ணங்களும் …..

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More