குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனின் பிரேரணையை சபையில் எடுக்க அனுமதிக்க மாட்டேன் என அவைத்தலைவர், அமைச்சருக்கு பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.
சபை உறுப்பினரான அயூப் அஸ்மீன் என்னிடம் கைத்துப்பாக்கி உள்ளது என சபையில் தெரிவித்தமை எனது சிறப்புரிமையை மீறும் செயல் என பிரேரணையை அடுத்த அமர்வில் முன் மொழிய உள்ளேன். அதனை நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் என அவைத்தலைவருக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் கடிதம் எழுதி இருந்தார்.
குறித்த விடயத்தினை தீர்மானமாக நிறைவேற்ற சபையில் அனுமதிக்க மாட்டேன் எனவும் , ஆனாலும் குறித்த விடயம் தொடர்பில் சபையில் தன்னிலை விளக்கம் அளிக்க சந்தர்ப்பம் அளிப்பேன் எனவும் அவைத்தலைவர் பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.