ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி வைஎஸ்ஆர் , காங்கிரஸ் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் கடந்த 2014-ல் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவில் எழுந்த எதிர்ப்பை சமாளிப்பதற்காக அம்மாநிலத்திற்கு பல்வேறு சலுகைகள் வழங்குவதாக மத்திய அரசால் உறுதி அளிக்கப்பட்டது.
அதன்படி ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும் என ஆளும் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான வைஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆகியன வலியுறுத்தி வருகிறன. இந்நிலையில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரியும் இதற்காக தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவி விலகக் கோரி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் போட்டம் நடைபெறுகின்றது.