ஜப்பானில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக 65 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் தேசிய பேரிடராக அறிவித்து உள்ளது. ஜப்பானில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வெப்பம் நிலவுவதுடன் அனல் காற்று வீசுகிறது. அங்கு குமகாயா என்ற இடத்தில் கடந்த திங்கட்கிழமை 106 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளமையானது அந்நாட்டின் வரலாற்றில் அதிகபட்ச வெப்பநிலை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
எதிர்வரும் ஓகஸ்ட்; மாதத்தின் ஆரம்பம் வரை அங்கு அதிகபட்சமாக 95 டிகிரி வெப்ப நிலை தொடரும் என அந்த நாட்டின் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.கடும் வெப்பம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ள நிலையில் அங்கு இதனை தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது