குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
இலங்கையில் வாழும் சிங்கள மக்களை விட பழமையான வரலாறு தமிழர்களுக்கு இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியிருப்பதாகவும் இப்படியான பொய்யை அவர் எப்படி கூறுகிறார் என்பதை எண்ணிப்பார்க்க முடியவில்லை எனவும் பொங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சிங்கள மக்களை விட பழமையான வரலாறு இருப்பதாக முதலமைச்சர் கூறியிருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சிங்கள மக்களுக்கு போன்று மிகவும் தெளிவான, மிக நீண்ட வரலாறு எந்த இனத்திற்கும் இல்லை. மகாவம்சம் உட்பட வரலாற்று நூல்களில் இந்த வரலாறே இருக்கின்றது. சிங்கள எழுத்து முறை ஏற்பட்டுள்ள விதமும் இதனை தெளிவாக புலப்படுத்தியுள்ளது. மகிந்த தேரர் கூட சிங்களத்தில் தர்ம உபதேசம் செய்துள்ளார். இப்படியான வரலாறு இருக்கும் போது தனிநாட்டை உருவாக்க பொய்யான வரலாற்றை புனைந்து கூறும் விக்னேஸ்வரன் போன்றவர்கள் நாட்டில் முதலமைச்சராக பதவி வகிப்பது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பெரிய சாபம் எனவும் நாலக தேரர் குறிப்பிட்டுள்ளார்.
1 comment
‘இந்து சமுத்திரத்தின் முத்து’, என வர்ணிக்கப்படும் இலங்கை, இன்னோரன்ன இன்னல்களுக்கு உள்ளாவதற்கான முதன்மைக் காரணம், ‘இன- மத வெறி பிடித்த பௌத்த மத போதகர்களே’, என்றால் அது மிகையில்லை. அடுத்தபடியான காரணமாக, ஆட்சியில் காணப்படும் மதத் தலையீட்டைக் குறிப்பிடலாம். ஆக, முதன்மைக் காரணியான பௌத்த மத போதகர்களின் இருப்பானது, ‘முழு நாட்டுக்குமேயான சாபக் கேடு’, என்றால் அது மிகையாகாது.