ஊடகங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன தெரிவித்துள்ள கருத்து ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் தொடர்பில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து தொடர்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஒருவர் இவ்வாறு கூறுவது ஊடகங்களை அச்சுறுத்தும் செயலாகும் எனவும் அவர்கள் ஆட்சிக்கு வந்ததே இந்த ஊடக சுதந்திரத்தை பேசித்தான் எனவும் குறிப்பிட்ட அவர் இதே விளையாட்டை ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் செய்தார் எனவும் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் கடற்படை அதிகாரியினால் தொலைக்காட்சி ஊடகவியளார் தாக்கபட்டார்.அதே போல மற்றுமொரு ஆர்பாட்டத்தின் போது மற்றுமொரு ஊடகவியலாளர் காவல்துறை உயரதிகாரியினால் தாக்கப்பட்டார ஊடக சுதந்திரம் பற்றி பேசும் ஜனாதிபதியால் இவற்றுக்கு பதில் அளிக்க முடியுமா என அவர் குறிப்பிட்டார்.