இலங்கையின் முன்னாள் கிரிக்கட் அணித்தலைவர் குமார சங்கக்கார அரசியலுக்கு பிரவேசித்தால், அவருக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் குமார சங்கக்கார, ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுவாரா என்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து ஐக்கிய தேசிய முன்னணி கலந்துரையாடவில்லை எனவும் ஐக்கிய தேசிய கட்சி கலந்துரையாடியுள்ளதா என்பது தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின்போதே இந்த விடயங்கள் குறித்து அவர் குறிப்பிட்டார்.